பிரேமலதா விஜயகாந்த் போட்ட உத்தரவு.? கூட்டணியில் சலசலப்பு.! அப்செட்டில் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அனைத்து கட்சிகளும் கூட்டணி கதவை அடைந்தது. ஆனால் தினகரன் தலைமையிலான அமமுக கட்சி மட்டும் தேமுதிகவிற்கு கூட்டணி கதவைத்திறந்து வைத்தது. அதுமட்டுமின்றி தேமுதிகவுக்கு 60 சீட்டுகளை வழங்கியது. 

மேலும் அவர்கள் விரும்பி கேட்டா விருத்தாச்சலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்திற்கு வெற்றி வாய்ப்பை வாரி தந்த தொகுதி விருத்தாச்சலம். அந்த தொகையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதற்காக விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் முகாமிட்டுள்ளார். தீவிரமாக  களப்பணி ஆற்றி வருகிறார். 

விருதாச்சலம் தொகுதியை தேமுதிகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரேமலதா விஜயகாந்த் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, 60 சீட்டுகளை வாரி வாங்கிய அமமுக வெற்றிக்காக தேமுதிகவினர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது.

மேலும், கூட்டணி கட்சி போட்டியிடும் பல தொகுதிகளுக்கு தேமுதிக நிர்வாகிகள் சரியாக செல்லவில்லையாம். அதற்கு காரணம் பிரேமலதா என கூறப்படுகிறது. பிரேமலதா போட்டோ மறைமுக உத்தரவால் தான் தேமுதிகவினர்  இவ்வாறு நடந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் தினகரனுக்கு தெரியவரவே, அவர் தற்போது அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha new order ttv dinakaran upset


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->