அடுத்த ட்விஸ்ட்.. பாஜகவுடன் கூட்டணியா? இல்லவே இல்லை.. திட்டவட்டமாக மறுத்த பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது குறித்து தேமுதிகவுடன் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பதால் அதனை அதிமுக தரப்பு வழங்க மறுப்பதாகவும், இதன் காரணமாக பிரேமலதா பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய பிரேமலதா திடீரென பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலர் தேமுதிகவுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தனர். 

இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என கூறியுள்ள அவர் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு நேரம் எதுவும் நாங்கள் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha explain DMDK did not Alliance with BJP


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->