திமுகவை தெரிக்கவிடும் அதிமுக.. ஆடிப்போன திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக பிரதான கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அனைத்திலும் அதிமுக மற்றும் திமுக தீவிரம் காட்டி வருகிறது .

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதால், அதிமுக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனிடையே, தொடக்கத்திலிருந்தே விவசாயியாக இருந்து முதலமைச்சர் ஆக உயர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியை, தாழ்வுபடுத்தி பேசி வருகிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். ஆனால் மக்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது. 

தற்போது அதிமுகவின் நிரந்தர முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். தற்போதும் அவரின் மதிப்பை குறைத்து பேசி வருகிறார் மு க ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவினர் புதிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். 

அந்த போஸ்டரில், மண்ணின் மைந்தனா? உளறல் மன்னனா? செயல் நாயகனா? அறிக்கை நாயகனா? மக்களில் ஒருவரா? மடாதிபதியா? மக்கள் போராளியா? குடும்பப் போராளியா? உண்மைத்தலைவனா? ஊழல் மன்னனா? விவசாயிகளின் தோழனா? ரவுடிகளின் தோழனா? மக்கள் தலைவரா? குடும்பத்தலைவரா? கலக்கல் நாயகனா? சொதப்பல் நாயகனா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமைகளையும், ஸ்டாலின் குறைகளையும் சுட்டிக்காட்டி போஸ்டர்களை அதிமுகவினர் ஒட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poster campaign for admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->