சிறை தண்டனையில் இருந்து தப்புவாரா பொன்முடி? உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ம் தேதி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துதிருப்பு வழங்கியது. அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதேவேளையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 


இந்த 30 நாட்கள் பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சரணடைய வேண்டும்  நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் நிலையில் பொன்முடியின் சிறை தண்டனை உறுதி செய்யப்படுமா? அல்லது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


இதற்கு கரணம் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய 30 நாட்ட்கள் கால அவகாசத்தில் ஏற்கெனவே 22 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் 8 நாட்ட்கள் மட்டுமே மீதமுள்ளது. அதிலும் சனி, ஞாயிறு என 2 நாட்ட்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால் பொன்முடி தரப்புக்கு 6 நாட்ட்கள் மட்டுமே மீதமுள்ளது. ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் பொன்முடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வர இருப்பது திமுக வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi appeal Hearing today in the Supreme Court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->