அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்; உதயநிதி ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிராக  நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுயுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- 

'இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 09 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை கிடைத்திருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு ஒரு கருப்பு பக்கம். குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்.' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pollachi sexual atrocities against women during AIADMK rule are a black page in Tamil Nadu history Udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->