முன்னாள் எம்பியின் தாயார் மறைவு! டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி நேரில் அஞ்சலி!  - Seithipunal
Seithipunal


புதுவை மாநிலம் கரிய மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ தன்ராஜின் தாயார் கோ.இந்திராணி அம்மாள் நேற்று இரவு வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். மருத்துவர் ராமதாஸின் உறவினரான கோ.இந்திராணி அம்மாள் மறைவிற்கு குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினர். 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "புதுவை மாநிலம் கரிய மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ தன்ராஜ் அவர்களின் அன்பு தாயாரும், எனது உறவினருமான கோ.இந்திராணி அம்மாள் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

கோ.இந்திராணி அம்மாள் தாய்மையின் அடையாளமாக திகழ்ந்தவர். அனைவர் மீதும் அன்பு காட்டியவர். தேவைப்படுவோருக்கு உதவி செய்தவர். என் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர். குடும்பத்தினரை அரவணைத்து சென்றவர்.

கோ.இந்திராணி அம்மாளின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் கோ. தன்ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கோ.இந்திராணி அம்மாள் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பகாசூரன், செல்பி திரைப்படங்களில் நடித்த நடிகர் குணாநிதி, மறைந்த இந்திராணி அம்மாளின் பெயரன் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pmk leaders paid last respect PMK EX MP Dhanraj mother passes away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->