பதவியேற்ற பஞ்சாப் முதல்வர் பகவந் மான்.! வாழ்த்துக்கூறிய பிரதமர்.!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற பகவந் மானுக்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 117 இடங்களில் 92 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பகவந் மான் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 

அதன்பின் இன்று பகத் சிங்கின் ஊரான கட்கட் களானில் நடந்த பதவியேற்பு விழாவில் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 16 எம்எல்ஏக்கள் அவருடன் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

இந்த விழாவில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்ற பகவந் மானுக்கு தங்களது வாழ்த்துக்களை பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். 

இத்தகைய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "பஞ்சாப் முதல்வராக பதவியேற்று இருக்கும் பகவந் மானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பஞ்சாப் மாநில வளர்ச்சிக்காகவும். மக்கள் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wishes to bhagawanth mann


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->