எரிபொருள் விநியோகம்; மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை; தேர்தலை சந்திக்கும் மாநிலங்களுக்கு அழைப்பு இல்லை..? - Seithipunal
Seithipunal


அணுஆயுத போட்டிகாரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் 28-ஆம் தேதி காலையில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி உள்ளிட்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்தும், இஸ்ரேல் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. 04 வாரங்களை கடந்துள்ள குறித்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இதனால் வளைகுடா நாடுகள் போர்க்களமாக மாறியுள்ளன. இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் கச்சா என்னை விநியோகம் முடங்கியுள்ள நிலையில், சர்வதேச நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. 

இந்நிலையில், எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நேரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதன் போது போது போர் சூழல் பாதிப்புகளின் தாக்கம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 'டீம் இந்தியா' என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய இலக்காகும்.

இந்நிலையில் அடுத்த மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குறித்த 05 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்காகத் தனியொரு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi to hold consultations with State Chief Ministers tomorrow regarding fuel distribution


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->