தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறையுங்கள் - தமிழக அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து மாநில முதலமைச்சர்களும்  கலந்துக் கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது,

"பெட்ரோல் - டீசல் விலை மற்றும் வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவம் உதவி பெறும் வகையில் வாட் வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசின் வார்த்தைகளுக்கு தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் செவி கொடுக்கவில்லை. மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குடிமக்களின் சுமையை குறைக்க  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை  குறைத்தது.

மாநிலங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், சில மாநிலங்கள் வரிகளை குறைத்துள்ளன. வரிகளை குறைக்காத மாநிலங்கள் மக்களுக்கு எந்த வித பலனையும் தரவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

மாநிலங்கள் வரிகளை குறைப்பதால், வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது. கர்நாடக மாநிலத்தில் வரிகள் குறைக்கப்படாமல் இருந்திருந்தால், கூடுதலாக 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைத்திருக்கும். குஜராத்தும் கூடுதலாக 3500- 4000 கோடி ரூபாய் வசூலித்திருக்கும்". என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi say about tn govt petrol diesel tax


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->