கடலூரில் 7 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை  முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், கடலூர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த 7 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் கடலூரில் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிர் இருந்தது வருத்தமளிக்கிறது. அவரது நண்பர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi mourns of cuddalore 7 people death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->