பிரதமர், முதல்வர் பதவிகளை பறிக்கும் மசோதா! சீமான் முழு ஆதரவு!
PM CM Lok Sabha NTK Seeman
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா, குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தால் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், இந்த சட்ட முன்வைப்பிற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதிகள் குற்றம் செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது தவறல்ல. அது நீதி, அதுவே ஒழுங்கையும் உருவாக்கும். அரசியலில் வெளிப்படைத்தன்மையும் ஒழுங்கும் நிலைக்க வேண்டுமெனில் இத்தகைய மாற்றங்கள் அவசியம். பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
மேலும், திருச்சியில் பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
English Summary
PM CM Lok Sabha NTK Seeman