அதிமுகவை முதுகில் குத்திய தேமுதிக.! சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவு.! அந்தர் பல்டி அடித்த அமமுக.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கூட்டணி கணக்குகளை போட்டு வருகின்றன. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் இடம்பெறுமா., இடம்பெறாத என்ற கேள்விக்குறி தொடர்ந்து வலுத்து வருகிறது.

கூட்டணி குறித்து தேமுதிக தரப்பில், நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்தாலும், அதிமுக எங்களுக்கு தேவையான தொகுதியை ஒதுக்க வில்லை என்றால் கூட்டணியை விட்டு விலகி தனித்தே போட்டியிடும் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தங்கவேலுக்கு தேமுதிகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளனர்.

இதேபோல், திமுக வேட்பாளர் தங்கவேலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக 7 வாக்குகளை பெற்றது. அமமுக -தேமுதிக ஒன்றிணைந்து திமுகவை ஒன்பது வாக்குகள் பெற வைத்து மாபெரும் வெற்றியை திமுகவுக்கு தேடித் தந்துள்ளது.

முன்னதாக திமுகவை அழிப்பதே எங்களது முதல் குறிக்கோள் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PERIYAKULAM ELECTION DMK AMMK DMDK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->