ஓய்வூதியத் திட்டம் அரசுக்கு சவால் தான்… ஆனால் வாய்ப்பும் உண்டு...! - ப.சிதம்பரம் விளக்கம்
pension scheme challenge government but it also presents opportunity P Chidambaram explains
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முழு விவரங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில், இது அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், நிதி மேலாண்மை திட்டமிட்டும், ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டால், இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21 முதல் 22 சதவீதம் ஓய்வூதிய செலவுகளுக்கே ஒதுக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால், அரசின் சொந்த வரி வருவாயை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், திட்டச் செலவுகள் மதிப்பீட்டைக் கடக்காமல் துல்லியமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிக்கனம், கட்டுப்பாடு, திறமையான நிதி மேலாண்மை ஆகியவை அரசின் அனைத்து துறைகளுக்கும் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும் என்பதே தனது முக்கிய அறிவுரை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
English Summary
pension scheme challenge government but it also presents opportunity P Chidambaram explains