மத்திய அரசு அதிரடியாக விதித்த தடை சட்டமாகிறது.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி, ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற்று வந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது.  

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, இன்று கூடி அடுத்த மாதம் அதாவது நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை நடத்துவது என முடிவெடுத்துள்ளது. 

இந்த கூட்ட தொடரில் கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைப்பது, வருமான வரி சட்டம் மற்றும் நிதிச் சட்டத்தில் மாற்றம் செய்த அவசர சட்டம். மற்றும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டம் ஆகிய இரண்டு அவசர சட்டங்கள், சட்டங்களாக நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament starting date announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->