தப்பி ஓடிய அகமதுமசூத்.! தலிபான்கள் வசம் சிக்கியது பஞ்சஷேர் மாகாணம்.! - Seithipunal
Seithipunal


அத்துமீறி ஆப்கானிஸ்தானில் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை பிடித்துள்ளனர். தற்போது ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேர் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

அன்மையில் பஞ்சஷேரியில் தாலிபான்களுக்கும் போராளிகளுக்கும் நடைபெற்ற மோதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக பஞ்சஷேரில் உள்ள போராளிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையே, மொத்த ஆப்கனிஸ்தான் நாட்டையும் கைப்பற்றியதாக மார்தட்டி கொள்ளும் தாலிபான்களால், நாட்டின் பஞ்சஷேர் பள்ளத்தாக்கு பகுதியை கைப்பற்ற முடியாமல் தவிர்ப்பதற்கு, அந்தப் பகுதியில் நிறைய கண்ணிவெடிகள் இருப்பது தான் காரணம் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பஞ்சஷேர் மாகாணத்தின் 4 பக்கங்களில் இருந்தும் தலிபான் படையினர் உள்ளே நுழைந்து அதிரடி தாக்குல் நடத்தியதன் காரணமாக, போராளிக் குழு, வடக்கு கூட்டணி படை பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வடக்கு கூட்டணி படையினரின் செய்தி தொடர்பாளர் பாகீம்தாஸ்தி, முக்கிய தளபதிகள் கைதர்கான், முனீப் அமிலி, வாதூர் ஆகியோர் தாலிபான்களால் கொல்லப்பட்டு உள்ளதாகவும், இதனால் தலைவர் அகமதுமசூத், முன்னாள் துணை அதிபர் அமர்துல்லா சலே ஆகியோர் தப்பி ஓடி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில், தலிபான்களிடம் வடக்கு கூட்டணி படையின் தளபதிகள், தலைவர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panchsir force loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->