இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் இடையீட்டு மனுவுக்கு ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்...!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக பொதுக்குழு கூடி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பிறந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரியும், இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர் தொடர்பான விண்ணப்பத்தை ஏற்க கோரியும் ஈபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பிப்ரவரி 3ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்துழைக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் "அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அனைத்து சரத்துக்கள் மற்றும் விவரங்களும் அடங்கிய நிலையில் இடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது விசாரணைக்கு உகந்ததல்ல" எனக் குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS files reply to EPS interlocutory petition in Supreme Court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->