அதிமுக வேட்பாளர் தற்கொலை.. தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறைக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை மிரட்டி, அராஜகத்தில் ஈடுபடும் திமுக-வுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையமும், காவல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற 36-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக களம் இறங்கிய கழக உடன்பிறப்பு திரு. V. ஜானகிராமன் அவர்கள், திமுக-வினரின் தொடர் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மரணமடைந்திருக்கிறார்.

தமிழ் நாடு முழுவதும் வீசிக் கொண்டிருக்கும் திமுக எதிர்ப்பு அலையால், தோல்வி பயத்தில் சுருண்டு கிடக்கும் திமுக-வினர், வெற்றியை நோக்கி மக்களின் பேராதரவுடன் சென்று கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு வகைகளில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தொலைபேசிகளில் கூப்பிட்டு மிரட்டுவது; தேர்தல் களத்தைவிட்டு விலகுமாறு அச்சுறுத்துவது; கழகத்தவரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்று, திமுக-வினரின் வன்முறை வெறியாட்டம் எல்லை மீறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை பற்றி புகார் அளித்தாலும் காவல் துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயலிழந்து நிற்கிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற 36-ஆவது வார்டு கழக வேட்பாளர் திரு. ஜானகிராமனை தொடர்ந்து சில நாட்களாக, பலமுறை தொலைபேசியில் அழைத்து போட்டியில் இருந்து வாபஸ் வாங்குமாறு மிரட்டி உள்ளனர். குடும்பத்தினருக்கு ஆபத்து நேரிடும் என்று திமுக-வினர் அச்சுறுத்தி உள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கழக உடன்பிறப்பு திரு. ஜானகிராமன் இன்று உயிரிழந்திருக்கிறார்.
திமுக-வினர் ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில், மக்களிடம் பெற்றிருக்கும் அவப் பெயரால் தோல்வி அடைவது நிச்சயம் என்பதால், இத்தகைய கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திமுக-வினரின் ஜனநாயக விரோதப் போக்கை உரிய முறையில் கண்டித்து நடவடிக்கை எடுத்திட தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். திமுக-வினரின் இத்தகைய நடவடிக்கைகளை காவல் துறை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குப் பதிவு நாள் நெருங்க, நெருங்க, அவர்களது மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயல்கள் அதிகரிக்கும் என்பதை கருத்தில்கொண்டு, தேர்தல் ஆணையரும், காவல் துறையும் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps statement for admk candidate suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->