அதிமுகவினருக்கு முக்கிய அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 24 ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30  மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்னர்.

இந்த, பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தர வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps new announcement for admk members


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal