ஆபரேஷன் 27! இறங்கி வேலை பார்க்கும் டெல்லி பாஜக! 9 தொகுதிகளில் கதை ஓவர்! புதிய வியூகத்துடன் பாஜக! நடப்பது என்ன?
Operation 27 Delhi BJP to get down to work Story over in 9 constituencies BJP with new strategy What is happening
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் வியூகத்தில் முக்கிய மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் குறிவைக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் அதிகபட்ச வெற்றியைப் பெற தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜக, அதில் 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கணித்து, அங்கு வளங்களை செலவிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக உள்துறை மதிப்பீட்டின் படி, ஆவடி, திருவண்ணாமலை, தளி, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் மானாமதுரை ஆகிய 9 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், “வெற்றி சாத்தியம் குறைந்த இடங்களில் சக்தியை வீணடிக்க வேண்டாம்” என்ற அடிப்படையில், இந்த தொகுதிகளை தனி பட்டியலாக பிரித்து, அங்கு குறைந்த அளவில் மட்டுமே தேர்தல் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாறாக, வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதிகளில் முழு கவனம் செலுத்தும் வகையில் பாஜக தனது வியூகத்தை மாற்றியுள்ளது. பூத் மட்டத்தில் இருந்து தேர்தல் நிதி வரை அனைத்து வளங்களையும் அந்த முக்கிய தொகுதிகளில் குவிக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. “ஜெயிக்கும் இடங்களில் அதிக முதலீடு” என்ற அணுகுமுறையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கைவிடப்பட்டதாகக் கூறப்படும் தொகுதிகளில் பெரிய அளவிலான பிரச்சாரங்கள், நட்சத்திர பேச்சாளர்கள் வருகை போன்றவை குறைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அங்கு உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் ஒரு வித சோர்வு நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பாஜக மிகவும் கணக்கிட்டு, ‘ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்’ அடிப்படையில் தேர்தலை அணுகுகிறது என்பது தெளிவாகிறது. வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிரமாக களம் இறங்கும் இந்த வியூகம் பலன் தருமா அல்லது எதிரொலியாக மாறுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.
English Summary
Operation 27 Delhi BJP to get down to work Story over in 9 constituencies BJP with new strategy What is happening