டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு சாதகமாக, தமிழக ஊடகங்களை நாடாளுமன்றத்தில் விமர்சித்த தமிழக எம்பி! - Seithipunal
Seithipunal


தமிழக ஊடகங்களின் செயல்பாடுகளை அண்மை காலமாக அரசியல் கட்சியினர் வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழக ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு சார்பு தன்மையுடன் நடந்து கொண்டதாகவும், அதில் பணியாற்றி வரும் பெரும்பாலானோர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒருதலைப்பட்சமாக நியாயமின்றி நேர்மை இன்றி செயல்படும் ஊடகவியலாளர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழும்பின. ஊடகவியலாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் என நினைத்திருந்த வேளையில், அனைத்து ஊடகங்களையும் அதிர வைக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு ஆதரவளிக்கும் படியான ஒரு சம்பவம் உலக அளவில் நடைபெற்றது. 

எத்தனையோ மக்கள் நலப் பணிகளை செய்து கொண்டிருப்பவர்களை  எல்லாம் செய்திகளில் காட்டாமல், யாருக்கும் எந்த நன்மையும் இல்லாத நடிகர் சங்கத் தேர்தலை நேரலை செய்து கொண்டிருந்த அனைத்து ஊடகங்களையும் தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் என்ற பெயரில் உலக அளவில் ட்ரண்ட் செய்து, தமிழக ஊடகங்களில் நேர்மையில்லா செயல்பாட்டினை பொதுமக்கள் அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்கள். ஏன் ஊடகங்களின் இந்த செயல்பாட்டினை நடிகர்களே சிலர் கடுமையாக எதிர்த்து இருந்தார்கள். 

இதனையடுத்து டாக்டர் ராம்தாஸ் க்கு எதிராக தற்போது கண்டனக் கூட்டங்கள் மூலம் எதிர்ப்பு என கிளம்பினால், ஊடகங்களுக்கு எதிராக கடுமையான கிளர்ச்சி ஏற்படும் என்பதால் அனைத்து ஊடகங்களுமே மௌனம் கட்ட ஆரம்பித்தனர். டாக்டர் ராமதாஸ் தான் முதல் முதலாக  விமர்சித்தார் என்றால் அது தான் இல்லை. அவர் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் மட்டுமே தற்போது இதை வெளியே பேச தொடங்கினார்கள். 

தேர்தல் முடிந்த மறுநாள் தமிழகத்தில் 80 சதவீத ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக நேரடியாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தினை பல தலைவர்களும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று தமிழக ஊடகச் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர்ப் பஞ்சம் குறித்தும், பாஜக கூட்டணி அரசான அதிமுக அரசின் செயல்பாடு சரியில்லை என்று கடுமையாக பொரிந்து தள்ளினார்கள். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் குமார் பேசும்போது, "தமிழக அரசின் சார்பில் இங்கே ஒரே ஒரு பிரதிநிதியாக நான் மட்டுமே இருக்கிறேன். ஆனால் அவர்கள் 37 பேர் இருக்கிறார்கள். அவர்கள் தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடிநீர் பஞ்சம் தமிழ்நாட்டில் இருப்பது உண்மைதான், அதற்காக நாங்கள் என்னென்ன பணிகளை செய்து கொண்டுள்ளோம், என்ன என்ன மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம் என்ற பட்டியல் இங்கே இருக்கிறது. அவர்கள் வேண்டுமானால் இதனை சரிபார்த்துக்கொள்ளலாம். ஏன் அவர்கள் ஊடகங்களிலேயே இதனை விவாதித்துக் கொள்ளலாம். அவர்களிடம் ஏகப்பட்ட ஊடகங்கள் உள்ளன. அவர்கள் தான் பெரும்பாலும் இல்லாத செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று ரவீந்திரநாத் குமார் குற்றம்ச்சாட்டினார். 

மேலும் நீங்கள் நேரம் கொடுத்தால் தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். இதற்கு திமுக கூட்டணி எம்பிக்கள் இடையே கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்தின் ஊடகங்களின் நிலைமை ஒரு சார்பு தன்மையுடன் இருப்பதாக நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதையே காட்டுகிறது. இனியாவது நேர்மையாக செயல்படுமா? செயல்பாடுகள் மாறுமா? மக்கள் எதிர்பார்க்கும் வண்ணம் செயல்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.. 

- வாசகர் கட்டுரை.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

op ravindranath spoke about tamilnadu media in Parliament


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->