இது தேர்தல் நேரம்.. வெங்காயம் கொண்டு போனாலும் போலீஸ் பிடிக்கும்..! உஷார்..! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் சீர்காழி அருகே உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இருபத்தி ஒரு டன் வெங்காயம் பரிசோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திட்டை கிராமத்தில் வட்டாட்சியர் பிரேம் சங்கர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய பறக்கும் படை குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் 21 டன் வெங்காயம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Image result for onion seithipunal

இதுகுறித்த விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து வெங்காயம் ஏற்றி வருவதாக ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருக்கின்றார். உரிய ஆவணம் இன்றி வெங்காயம் கொண்டு வரப்பட்டதால் சரக்கு வாகனத்துடன் பறக்கும் படையினர் வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து லாரியின் ஓட்டுனர் மற்றும் கிளீனர் இடம் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onion caught without document


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->