சசிகலா வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பெரும் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, இவருக்கு சென்னை, தஞ்சையில் உள்ளிட்ட சொந்தமாக பல வீடுகள் உள்ளது.

தஞ்சாவூர் மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மி‌‌ஷன் உயர்நிலைப்பள்ளி சாலையில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்ற நபர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். 

இந்தநிலையில், இந்த வீட்டின் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த கட்டிடத்தில் யாரும் வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, அந்த வீட்டின் 
குடியிருந்து வரும் மனோகர் உள்ளிட்டோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அந்த நோட்டீஸில், தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.பி.ஜி. மி‌‌ஷன் உயர்நிலைப் பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் சேதமடைந்து பழுதடைந்த நிலையில் எந்த நேரம் வேண்டுமானாலும், இடிந்து விழுகின்ற தருவாயில் . கட்டிடம் உள்ளதால் அந்த வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் மிகவும் அருகாமையில் வீடு உள்ளது.

எனவே அபாயகரமான கட்டிடத்தை 5 தினங்களுக்குள் இடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாநகராட்சி தெரிவித்தது.

15 நாட்கள் கடந்த நிலையில், கட்டிடங்கள் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர்.

அந்த கட்டிடத்தில் குடியிருக்கும் மனோகரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டேன். பழுதடைந்த இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நாய்கள் மட்டும் தான் உள்ளன. நாங்கள் பின்பகுதியில் உள்ள வீட்டில் தான் தங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். அந்த

அந்த நோட்டீஸில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளது அதனால் கட்டிடத்தின் உள்ளே செல்லுதல் அல்லது கட்டிடத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.

சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officers give notice to sasikala house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->