சமரசமே கிடையாது.. நிஜத்திலேயே நான் விவசாயி தான்.!! கொந்தளித்த சீமான்.!! - Seithipunal
Seithipunal


சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கிய நிலையில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் முன்பு ஒதுக்கிய மைக் சின்னத்திலேயே நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த சீமான் அறிவித்துள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசியதாவது "விவசாயி தினத்திற்காக கடைசிவரை போராடினோம், ஆனால் அது கிடைக்கவில்லை. சின்னத்தை இழந்தாலும் நம் எண்ணத்தை இழந்து விடக்கூடாது. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிட உள்ளது.

மைக் புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று. மைக் இல்லாமல் புரட்சியே இல்லை. ஒருபோதும் தேர்தல் அரசியலில் கூட்டணி வைக்க மாட்டேன் நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். சின்னம் விவகாரத்தில் எந்த பின்னடைவும் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை.

மக்கள் சின்னத்தை பார்க்க மாட்டார்கள் சீமானைத்தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சின்னத்தில் மட்டுமல்ல நிஜத்திலேயே நான் விவசாயி தான். பாஜக கூட்டணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் ஒருபோதும் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

என்னை எப்படியாவது வீழீத்திவிட வேண்டும் என நினைக்கிறார்கள். கடந்த தேர்தலில் 7 விழுக்காடு வாக்குகளை பெற்றதால் என்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள்" என சீமான் கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman said he was real farmer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->