ரெட் அலெர்ட் எதிரொலி: தி.மு.க. நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை அழைப்பு!
Northeast Monsoon TN Rain DMK
வடகிழக்கு பருவமழை ஆலோசனைக்காக விடுத்துள்ளது.
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பு பருவமழையின்போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் "சென்னை – தாம்பரம் - ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" நாளை காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Northeast Monsoon TN Rain DMK