கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை... ஆனால் பாஜக எந்த காலத்திலும்...? - வைகோ
no talk coalition government but BJP at any time Vaiko
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் ''வைகோ'' மற்றும் முதன்மைச் செயலாளர் ''துரை வைகோ'' இருவரும் அவரை நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பின் ஆரம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ கேட்டறிந்தார். மேலும், சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தனர்.
வைகோ:
இதையடுத்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைகோ தெரிவித்ததாவது,"கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.
பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை " என்று தெரிவித்தார்.இதன் நடுவே, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் ம.தி.மு.க. வெளியேறும் என்ற தகவலுக்கு வைகோ மறுப்பு தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
English Summary
no talk coalition government but BJP at any time Vaiko