ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதீஷ்குமார் தேர்வு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழு கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அக்கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக இருந்த லாலன் சிங் பதவி விலகியதைடுத்து, நிதீஷ்குமார் ஒரு மனதாக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்திற்கு பிறகு லாலன் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது "கட்சியில் பிளவு என்பது இல்லை. எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. நான் ஏன் கோபப்பட வேண்டும். இந்த வார்த்தையை இப்போது தான் கேட்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


தேர்தலில் கவனம் செலுத்த ஏதுவாக தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக நிதிஷ்குமாரிடம் தெரிவித்த நிலையில் தற்போது கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி "தேர்தலில் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை நிதீஷ்குமாரிடம் ஒப்படைக்க லாலன் சிங் விருப்பம் தெரிவித்தார். இதனை நிதீஷ்குமாரும் ஏற்றுக்கொண்டார்என அதனை உறுதி செய்துள்ளார்.
 இண்டியா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நிதீஷ்குமார் உள்ளார். இச்சூழ்நிலையில், கட்சியின் தலைவராக நிதீஷ்குமார் தேர்வாகி உள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitish Kumar chosen as united Janata Dal leader


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->