முதல்வர் பதவி ஏற்றவுடன் பதவியை இழந்த எடியூரப்பா!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி முதலமைச்சர் பதவியை இழந்து அவரது ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது 105 ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார், இதையடுத்து ஆளுநரது அழைப்பை ஏற்று முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக நளின்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new president for karanataka bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->