அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த அதிமுக தலைமை.. சட்டமன்ற தேர்தலால் மாறும் நிலைமை.? - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். திமுகவினர் கொரோனா காலகட்டத்தில் இருந்தே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி, மும்முரமாக செய்து வருகின்றனர். 

இதனிடையே, அதிமுக அமைச்சர்கள் புதிய திட்டத்தை போட்டுள்ளனர். அது என்னவென்றால், சொந்த தொகுதிகளை விட்டு வேறு தொகுதிகளில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகள் பெறலாம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆனால், இதற்கு அதிமுக தலைமை முட்டுக்கட்டை போட்டுள்ளது.

தொகுதி மாறி போட்டியிட யாரும் நினைக்க கூடாது. அப்படி தொகுதி மாறினால் அமைச்சர்கள் சொந்த தொகுதியில் எதுவும் செய்யவில்லையா.? ஏன் பயந்து வேறு தொகுதியில் போட்டியிடுகின்றனர் என திமுகவினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் போட்டியிடக்கூடிய அமைச்சர்கள் அவர்களது தொகுதியில்தான் இந்த முறையும் போட்டியிட வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது. 

மேலும் ஒரு சில அமைச்சர்களுக்கு இந்த முறை சீட்டு வழங்கப்போவதில்லை என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது கிடைத்துள்ள நிலையில், அது அதிமுகவுக்கு சாதகமாக மாறிவிடுமோ என்ற கலக்கத்தில் திமுகவினர் உள்ளனர். இதனால் தங்களுடைய தேர்தல் வியூகங்கள் எப்படியாவது அதிமுகவை காட்டிலும் முன்னெடுத்து செல்லவேண்டும் என்ற யோசனையில் திமுகவினர் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new plan for admk ministers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->