புதிய கல்வி கொள்கை என்பது நம் குழந்தைகளுக்கான மரண சாசனம் - நாதக சீமான். - Seithipunal
Seithipunal


பாஜகவின் நோக்கம் ஹிந்தி சமஸ்கிருதம் தான்! ஆங்கிலம் கூட இல்லை!

கடந்து 2018ம் ஆண்டு திருச்சி விமானத்தில் நாம் தமிழர் கட்சியினர் பொது சொத்துக்களை சேதுபடுத்திய வழக்கில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்தி மொழி குறித்தான கேள்வியை சீமானிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். 

அக்கேள்விக்கு "பாஜகவின் முக்கிய நோக்கம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் தான் ஆங்கிலம் கூட இல்லை.மூன்று ஐந்து எட்டாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி படித்தால் போதும் என்று சொல்வது தமிழ் மொழிக்கு சரிப்பட்டு வராது. தமிழ்மொழி ஒரு கடல். புதிய கல்விக் கொள்கை என்பது நம் குழந்தைகளுக்கான மரண சாசனம் என்று அறிஞர்கள் சொல்லியுள்ளனர்.

அறிஞர்கள் ஆசிரியர் கல்வியாளர்கள் கல்வியாளர்கள் ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்ததாக கூறும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குமரி ஆனந்தன் அந்த பெயரை வைத்து வீணடித்திருக்கிறார். 

எல்லாவற்றிற்கும் மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் ஆட்சியாளர்கள் எந்த தேர்வு எழுதுவதில்லை. அமைச்சர் பதவிகளுக்கு தேர்வு எழுத வைக்க வேண்டும். அப்போதுதான் அறிவானவன் ஆட்சி அதிகாரத்துக்கு வருவான். 

வெளி மாநிலங்களில் நீட் வினாத்தாள் சில லட்சங்களுக்கு கிடைக்கின்றன அதற்கு பெயர் தேர்வா? இதற்கு முந்தியே தேர்வில் தரமான டாக்டர்கள் உருவாகவில்லையா?

இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ் அதற்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New education policy is a death warrant for our children by NTK Seeman.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->