என் அப்பா, அம்மா ஒன்று சேரவேண்டும்., பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.! பெரும் சோகத்தில் கிராம மக்கள்.! - Seithipunal
Seithipunal


எனது இறப்பிலாவது எனது தாய் தந்தை ஒன்று சேர வேண்டும் என்று, கடிதம் எழுதி வைத்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தருண் என்பவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு தருண் என்ற மகன் உள்ளார். இவர் ராஜபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், ரவி - மேகலா தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த மாணவன் தருண், நேற்று இரவு தூங்குவதாக சென்றுவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் மாணவன் எழுதியுள்ள தற்கொலை கடிதத்தில், "தாய் தந்தை இருவரும் என்னுடைய மரணத்தில் ஆவது ஒன்றாக சேர வேண்டும். நான் எங்கும் செல்லவில்லை வீட்டில் பத்திரமாக உங்களுடன் இருப்பேன்" என்று அந்த கடிதத்தில் மாணவன் தருண் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேளுக்குறிச்சி காவல்துறையினர், மாணவன் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றி, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில், தாய் தந்தைக்காக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal school student dharun suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->