திமுக கூட்டணி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ., மருத்துவமனையில் மரணம்.! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என். நன்மாறன் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் என் நன்மாறன். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு வயது 74 ஆகிறது.

இந்நிலையில், இவருக்கு கடந்த புதன்கிழமை அன்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தினால், அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி நன்மாறன் உயிரிழந்தார். அரசியல் கட்சித் தலைவர் என்பதால், அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

n nanmaran dead


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->