திமுகவில் இருந்து ரஜினிக்கட்சிக்கு தாவும் முக்கியப்புள்ளி.?! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து விலகிய செந்தில் பாலாஜி, அதன்பின்னர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென திமுகவில் இணைந்தார். தற்போது அவர் திமுகவின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே விரைவில் செந்தில் பாலாஜி ரஜினியின் கட்சியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

senthilbalaji seithipunalக்கான பட முடிவுகள்

சட்டப்பேரவையில் செந்தில்பாலாஜி பங்கேற்று அதிமுக அரசின் திட்டங்கள் குறித்து குறைகளை பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், "அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபொழுது உயிரும், உடலும் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் சில மாதங்களில் தினகரன் பக்கம் சென்று அதே வசனத்தை தெரிவித்தார். தற்போது ஸ்டாலின் பக்கம் இருக்கும் செந்தில்பாலாஜி திரும்பவும் அதே வசனத்தை பேசி வருகின்றார். அவர் ரஜினி கட்சியில் சேர்ந்தால் கூட தன்னுடைய உடலும், உயிரும் ரஜினிக்கு ஆதரவு என்று பேசுவார். இதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MR vijayabasker says about senthilbalaji


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->