வந்தே பாரத் ரயிலா? வந்தே "இந்தி" ரயிலா?.. மதுரை எம்.பி ட்விட்..!! - Seithipunal
Seithipunal


சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு இந்தியா முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நாட்டின் பல நகரங்களுக்கு இடையே 11 வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படுகிறது. தமிழகத்தில் 12-வது வந்தே பாரத் ரயிலை சென்னை - கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 11.18 மணிக்கு கோவை வந்தடைந்தது.

தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும். மக்களின் வரவேற்பை பொருத்து பெட்டிகள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பணியாற்றப்படும் சீனியர் லோகோ பைலட்டுக்கு இந்தி தெரிந்திருப்பது கட்டாயம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வந்தே பாரத் ரயிலா? வந்தே "இந்தி" ரயிலா? சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது  பணியமர்த்துவது வழக்கம். ஆனால்  பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு.இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Venkatesan condemns required Hindi to run Vande Bharat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->