பாஜக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பபட்டன. 

இதைத்தொடர்ந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் துறை சம்பந்தமான 3 வேளாண் மசோதாக்களையும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றினார். 2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியதால் இரு மசோதாக்களும் சட்டமாகியுள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை குறைப்பது உள்ளிட்ட 4 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. காரோண சூழலில் அரசின் செலவினங்களை குறைக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை 30 சதவீதம் வரை குறைக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதே போன்று ரக்க்ஷிய ரக்ஷா யூனிவர்சிட்டி மற்றும் தேசிய தடைய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைப்பதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேலும், குறிப்பிட்ட இரு தரப்புக்கு இடையேயான நிதி ஒப்பந்தத்தை தகுதி வாய்ந்ததாக அங்கீகரிப்பதற்கான  அதற்கான நிதி ஒப்பந்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை 30 சதவீதம் வரை குறைக்கும் மசோதா நிறைவேறியதால் தங்களது ஊதியம் குறைக்கப்படுமோ என பாஜக மற்றும் எதிர்கட்சி எம்.பிக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp salary reduce bill passed in parliament


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->