மோடிக்கு... இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சலில் 50% கூட இல்லை...! - ராகுல் காந்தி காட்டம்
Modi doesnt even have 50 percentage courage Indira Gandhi had Rahul Gandhis joke
டெல்லி பாராளுமன்றத்தின் மக்களவையில் ''ஆபரேஷன் சிந்தூர்'' தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ''ராகுல் காந்தி'' ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"பஹல்காமில் அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன்.ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு முழு ஆதரவு அளித்தன.
மத்திய அரசு ராணுவத்தினரை சுதந்திரமாக செயல்படவில்லை. அதனால் நாம் நமது போர் விமானங்களை இழந்தோம்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலக நாடுகள் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கின்றன.
போர் நிறுத்தத்துக்கு காரணம் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 29 முறை தெரிவித்துள்ளார்.அதை எதிர்த்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மறுத்து ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை?இந்திரா காந்திக்கு இருக்கும் துணிச்சலில் 50 %-வது இருந்தால் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அதிபர் டிரம்ப் ஏன் விருந்தளித்தார்? இதில் சீனா- பாகிஸ்தானின் உறவு நிலை குறித்து நான் எச்சரித்ததை புறக்கணித்து விட்டீர்கள்.வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது" என காட்டமாக தெரிவித்தார்.
English Summary
Modi doesnt even have 50 percentage courage Indira Gandhi had Rahul Gandhis joke