திருட்டுக்கு துணை போகிறதா தமிழக போலீஸ்? வெளியான அதிர்ச்சி வீடியோ.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் மாமாங்கம், செட்டிச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெள்ளைக் கற்கள் எனப்படும் கனிமம் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்லாண்டுகளாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

சமீபத்தில், இந்தக் கற்களைக் கடத்திய லாரியைப் பின்தொடர்ந்த ஊடகவியலாளர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. 

கடத்தலைத் தடுக்க வேண்டியவர்களே, அதற்குத் துணைபோவது ஏற்புடையதல்ல. எனவே, காவல்துறை தலைமை இயக்குநர், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். 

சேலம் மாவட்ட ஆட்சியர், கனிம வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும்  தலையிட்டு, கடத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கனிமவளக் கடத்தலை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுத்த ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்திலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Say About Robbery issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->