வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் ம.நீ.ம தலைவர்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வருகிற 19 ஆம் தேதி முதல் ஏழுகட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ. பிரகாஷுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை ஈரோட்டில் தனது பரப்புரையைத் தொடங்க உள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM party leader kamalhaasan start election campaighn from tomarrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->