கமல் பிரச்சாரம் செய்த நேரத்தில்.. திமுகவிற்கு தாவிய மக்கள் நீதி மையம் வேட்பாளர்.! பேரதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் மதுரை மாநகராட்சியில் 100 வார்த்தைகள் இருக்கின்றன. இதில் 93 வார்டுகளில் மக்கள் நீதி மையம் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இதில் அருள் பிரகாஷ் என்பவர் 43 வது வார்டு வேட்பாளராக மக்கள் நீதி மையம் சார்பில் களமிறக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தனது வார்டில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் திடீர் என்று நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

நேற்று மதியம் மதுரை மாநகராட்சியில் உள்ள மக்கள் நீதி மையம் போட்டியிடும் வார்டுகளில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தனது கட்சி நிர்வாகிகளுடன் அருள் பிரகாஷ் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். 

அதே நேரத்தில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் படித்துறை பகுதியில் வேனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அவரை சந்தித்து மாலை அணிவித்து திமுகவில் இணைந்து கொண்டார். அருள்பிரகாஷ் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து உதயநிதி அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்புக் கொடுத்தார்.

கமலஹாசன் பிரச்சாரம் செய்த அதே நாளில் கட்சியின் வேட்பாளர் ஒருவர் திமுகவில் இணைந்த சம்பவம் அப்பகுதி அரசியல் கட்சியினர் இடையே விறுவிறுப்பை ஏற்படுத்தியது. அத்துடன் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mnm Compatater join dmk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->