பொங்கல் பரிசு தொகுப்பு., கடைசி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


வரும் 17ஆம் தேதி அன்று இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள்,  மல்லித்தூள், கடுகு,  சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் வரும் 17ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேசன் கடைகளுக்கு ஜனவரி 17ல் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் வரும் 17ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin TNGovt PongalGift


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->