இது கனவுகள் நிறைவேறும் காலம்! மு.க ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான வீடியோ.!!
MKStalin released emotional video regards karunanidhi memorial Day
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி இன்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 8:00 மணி அளவில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து புறப்படும் அமைதி பேரனையானது காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் நிறைவடைகிறது. மேலும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் நிலையம் வைத்து அனைத்து நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவை போற்றிடும் வகையில் உருக்கமான காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "மூத்த பிள்ளை முரசொலி வாயிலாக தலைவர் கலைஞருக்கு உறுதியளிக்கிறேன். இது கனவுகள் நிறைவேறும் காலம்! #என்றென்றும் கலைஞர்" என 4 நிமிடம் நீளம் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
English Summary
MKStalin released emotional video regards karunanidhi memorial Day