#சற்றுமுன்: முக ஸ்டாலின் கூட்டத்துக்கு அதிரடி தடை.! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலை  முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதிமுக முதல்வர் வேட்பாளர், தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இதேபோல், திமுக தலைவர் தனது தேர்தல் பிரச்சாரத்தையும், திமுக சார்பில் கிராமசபை கூட்டத்தையும் நடத்தி வருகிறார். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் செல்லியம்மன் கோவில் பகுதியில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு சற்றுமுன் காவல்துறை தடை விதித்து, அதற்கான நோட்டீசை திமுகவின் செஞ்சி மஸ்தான் இடம் காவல்துறை வழங்கியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் மு க ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 2000 பேர் பங்கேற்க உள்ளதாகவும், இந்த கூட்டம் முடிந்த பின்பு, ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்குப்பதிவு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin meeting ban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->