இழுபறி எதிரொலி., பின்வாங்கிய ஸ்டாலின்.! வெளியானது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே மாதம் 2 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் காட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், விசிக-வுக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கி ஒப்பந்தம் ஆகியுள்ளது.

மேலும், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை அனைத்துமே இழுபறியில் உள்ளது. 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார தேதி திடீரென மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க வேண்டிய மு.க.ஸ்டாலினின் ஆறாம் கட்ட ‘உங்கள்தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரம் மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநாடு தேதி ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஒருவழியாக வரும் 7 ஆம் தேதி திருச்சியில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN election campaign date change sec time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->