வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: சிறுபான்மையினர், தலித்துக்கள் மற்றும் ஆதிவாசிகள் ஓட்டுரிமை இழக்கும் அபாயம் என்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே..!
Minorities and Dalits risk losing voting rights due to special amendment in voter list says Congress leader Kharge
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். டில்லி விஜய் சவுக்கில் செய்தியாளர்களிடம் இது குறித்து கார்கே மேலும், கூறியதாவது:
பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் விவாதிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், மத்தியில் உள்ள பாஜ தலைமையிலான அரசு அதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்து இந்தியர்களின் ஓட்டுரிமையை பாதுகாப்பது முக்கியம் என்பதால், அது குறித்து விவாதிப்பது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தால் சிறுபான்மையினர், தலித்துக்கள் மற்றும் ஆதிவாசிகள் தங்களின் ஓட்டுரிமை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த விரும்புகின்றன. என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minorities and Dalits risk losing voting rights due to special amendment in voter list says Congress leader Kharge