'மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க மாட்டார்கள்'; அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை..!
Minister Vignesh warns that anyone charging an extra 10 rupees for a liquor bottle will not be on duty the next day
தமிழக்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குபவர்கள் அடுத்த நாள் பணியில் இருக்க மாட்டார்கள் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மேவளூர்குப்பம் பகுதியில் இயங்கி வரும் மது ஆலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வினை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ் தெரிவித்ததாவது; போதிய அளவு அரசுக்கு வருவாய் வந்த பிறகு, படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன், மதுக்கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குபவர்கள் அடுத்த நாள் பணியில் இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மக்களுக்கு இடையூறாக இருந்த 717 மதுக்கடைகளை அரசு மூடியிருப்பதாகவும் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
Minister Vignesh warns that anyone charging an extra 10 rupees for a liquor bottle will not be on duty the next day