திமுக எம்.எல்.ஏ தொகுதிக்கு, பாஜக எம்.எல்.ஏவை நிதி ஒதுக்க சொன்ன அமைச்சர் உதயநிதி.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையில் இருந்து பழைய ஹாக்கி டர்ஃப் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை மேற்கோள் காட்டி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு பாளையங்கோட்டை  அண்ணா விளையாட்டு  மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப்(Hockey turf)அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதை அமைப்பதற்கான செலவே மிகவும் அதிகம் எனவே புதிய ஹாக்கி டர்ஃப் (Hockey Turf) அனுப்பி வைத்து அதனை அமைக்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டு இருந்தார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருடைய பதிவை ரீட்விட் செய்த உதயநிதி ஸ்டாலின் "அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்,

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf–ஐ அமைக்கவுள்ளோம். 

மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம். 

புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும். அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். நன்றி" என பதிவிட்டுள்ளார்.

பாளையங்கோட்டை தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த அப்துல் வாகப் இருந்து வரும் நிலையில் அந்த தொகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை நிதி வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டிருப்பது கடும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udayanidhi asked BJP MLA to allocate funds to DMK MLA constituency


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->