திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க 06 பேர்கொண்ட குழு; இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் 29ஆம் தேதி, புதிய தவெக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு விரைவாக சாமி தரிசனம் செய்ய ஒருவருக்கு ரூ. 1000 என அமைச்சர் உட்பட அவருடன் வந்தவர்கள் மூவருக்கு சேர்த்து ரூ. 4000 லஞ்சமாக அர்ச்சகர் ஐயப்பன் வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எடுத்த நடவடிக்கையில் அர்ச்சகர் ஐயப்பனுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை திருச்செந்தூர் கோயில் அர்ச்சனை செய்ய தடை விதித்து உத்தரவிட்பட்டுள்ளது. அத்துடன், கோயிலில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவன ஒப்பந்த காவலர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டும், முடியிறக்கும் பணியாளர்கள் இருவரின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்த அறநிலையத்துறை சார்பில் ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு 100 ரூபாய் டிக்கெட், அன்னதானம், தங்குமிடம் முன்பதிவு போன்ற கோவிலின் பல்வேறு சேவைகளில் இருக்கும் புகார்களை விசாரித்து அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Ramesh has ordered the formation of a six member committee to investigate irregularities at the Tiruchendur temple


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->