அமைச்சர் பதவி பறிப்பின் எதிரொலி.. திமுக கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர் நாசர்..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10:30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். நேற்று வெளியான இந்த அறிவிப்பில் இருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த நிலையில் பால்வளத் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் திமுக சார்பில் நடைபெற்ற இரண்டு ஆண்டு சாதனைகளுக்கு பொதுக்கூட்டத்தை அமைச்சர் நாசர் புறக்கணித்துள்ளார். தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை குறித்தான விளக்கப் பொதுக்கூட்டம் திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர்குப்பம் பகுதியில் நடைபெற்றது. 

அதன் ஒரு பகுதியாக திருவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சென்னீர்குப்பம் பகுதி நடைபெற இருந்த திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க சென்றபோது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதனால் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட மேடையில் ஏறாமல் காரில் வேகமாக கிளம்பி சென்றார். இதனால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Nasar left dmk meeting after stripped his post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->