"தி.மு.க தேர்தல் அறிக்கை 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்" -அமைச்சர் முத்துசாமி தகவல்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதேபோன்று அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் முத்துசாமி கடந்த பொது தேர்தலில் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இன்னும் 2 வருடங்களில் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "திமுக தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல நூறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட திட்டங்களில் ஏறத்தாழ 350 திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கொடுத்த கால அவகாசம் 5 ஆண்டுகள், ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் புதிய திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரும்" என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Muthuswamy said DMK election manifesto will be completed in 2years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->