தோனியவே அலட்சியப்படுத்திறீங்களா., அடக்கடவுளே.. ஆஸி., கேப்டன் அதிரடி பதிலடி.!! - Seithipunal
Seithipunal


இந்திய-ஆஸி., அணிகளுக்கு இடையிலான எதிரான 5 ஒரு நாள் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்திய அணி உலக கோப்பைக்கும் முன் ஆடும் கடைசி தொடர் இதுவாகும். இந்த தொடரில் ஆஸி.,  அணி 3-2என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கைப்பற்றியது. 

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெட்ரா இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதில் இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரி‌ஷப் பந்த் களமிறக்கப்பட்டார். ஆனால், அவரின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும். 

இதன் காரணமாக தொட்டிக்கு ஓய்வு கொடுத்தது தவறு என்ற எண்ணமும், தோனியின் பங்கு ஆட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்திய ரசிகர்கள் உணர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது டிவிட்டர் பக்கத்தில், ''தோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. அதற்கு முக்கிய காரணம் மிடில் ஆர்டர் வரிசையில் அனுபவம் மிகவும் முக்கியம். அதனால் அவரை அலட்சிய படுத்தாதீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் தோணி குறித்து தெரிவிக்கயில், ''ஒரு ஆட்டத்தின் நிலை தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி போல் ஒருவர் அணியில் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் அணியில் இருக்க வேண்டும். அவரின் ஓய்வு பற்றி, ஆட்டம் பற்றி விமர்சனம் செய்யும் அந்த நபர்கள், தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொண்டு இருக்கின்றனர்'' என்று தான் சொல்ல வேண்டும்.
 

English Summary

michael celatk


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal