மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி.. மாயாவதியின் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகுதன் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி "மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வறுமையை போக்குவதற்கு பதிலாக மதியம் மற்றும் மாநில அரசுகள் இலவசங்களை கொடுத்து மக்களை அடிமைகளாக வைக்க முயற்சிக்கின்றன.

எங்கள் அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம் இதன் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தனித்தே போட்டியிடும் வாய்ப்பு இருந்தால் தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாயாவதி இவ்வாறு அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayavati declared Bsp contestant alone in loksabha election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->